நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்சில் எண்ணெய் குழாய் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று கடப்பிதழை இலவசமாக வழங்குகிறது மலேசியக் குடிநுழைவு துறை 

புத்ரா ஹைட்ஸ்: 

புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேதமடைந்த கடப்பிதழுக்கு மாற்றாக மாற்று கடப்பிதழ் ஒன்று இலவசமாக வழங்கப்படும் 

மலேசிய குடிநுழைவு துறை இந்த சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டதாக மலேசிய குடிநுழைவு துறை தெரிவித்தது 

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மலேசியக் குடிநுழைவு துறை அலுவலகத்திற்குச் சென்று மாற்று அனைத்துலக கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்று JIM இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபன் கூறினார் 

சேதமடைந்த கடப்பிதழை வைத்திருந்தாலோ அல்லது காவல்துறையின் புகார் நகலை கொண்டோ பாதிக்கப்பட்டவர்கள் மாற்று கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்யலாம். 

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சுமையைக் குறைக்கவும் அவர்களின் அனைத்துலக பயணம் சீராக இருக்கவும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset