நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 மில்லியன் ரிங்கிட் மோசடி டான்ஶ்ரீ பட்டம் கொண்ட பிரபல வர்த்தகர் கைது: காவல்துறை தகவல் 

கோலாலம்பூர்: 

10 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தி பொதுமக்களை மோசடிக்கு உள்ளாக்கிய டான்ஶ்ரீ பட்டம் கொண்ட நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் 

புக்கிட் அமான் கள்ளப்பண பரிமாற்றம், பணச்சலவை பிரிவு AMLA  இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது 

சந்தேக நபர் பொதுமக்களிடமிருந்து 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை வசூலித்ததாகவும் சிலரின் வழக்குகளை முடித்து வைக்க கூடுதலாக 25 மில்லியன் ரிங்கிட் நிதி கோரியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

சந்தேக நபரின் நடவடிக்கைகள் புக்கிட் அமான் காவல்துறையினர் கண்காணித்து வந்ததாகவும் சனிக்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் உறுதிப்படுத்தியது 

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset