நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாசிர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங் பகுதிகளுக்கான மின் துணை நிலையங்களை டிஎன்பி மூடியது

பாசிர்மாஸ்:

வெள்ளத்தால் பாசிர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங் ஆகிய பகுதிகளுக்கான மின் துணை நிலையங்களை டிஎன்பி நிறுவனம் மூடியுள்ளது.

நேற்றிரவு முதல் அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் மக்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு டிஎன்பி எனப்படும் தேசிய மின்சார வாரியம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

மின் துணை நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து பொங்கால் கூலிம், குபாங் ரம்புதான், டெகோங், கோக் பாவ் பள்ளி, குவால் தம்பூன் உட்பட பல பகுதிகளுக்கான மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் குவால் டாலாம், லூபோக் செதோல், கம்போங் ரஹ்மாட், லிமாவ் பாரோட் ஆகிய பகுதிகளுக்கான மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset