நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் ஜசெக எம்பி ஜோன் பெர்னாண்டஸ் காலமானார்

சிரம்பான்:

முன்னாள் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோம் பெர்னாண்டஸ் காலமானார்.

82 வயதான அவர் முதுமை காரணத்தால் காலமானார் என்பதை அவரின் மகன் இவான் உறுதிப்படுத்தினார்.

ஜசெகவை தோற்றுவித்த உறுப்பினர்களில் இவரும் அடங்குவார்.

கடந்த 1966ஆம் ஆண்டு முதல் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மறைந்த தேவன் நாயர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

அதே வேளையில் கடந்த 1974ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை அவர் ராசா சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

1980 ஆம் ஆண்டில், தலைமையுடனான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜசெகவில் இருந்து விலகினார்.

இருப்பினும் அவர் 2000ஆம் ஆண்டில் மீண்டும் கட்சியில் இணைந்தார்

மேலும் 2008இல் ஒரு முறை சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் சேவையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset