செய்திகள் மலேசியா
மந்தின் ஐயப்ப சுவாமி பக்தர்களின் சிறப்பு பூஜை
மந்தின்:
சிரம்பான், மந்தின் வட்டாரத்தில் 18 ஆண்டுகள் இடைவிடாது தொடர்ந்து ஐயப்பன் பக்கதர்களின் குரு சாமியாக இருந்து சபரிமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வந்த பரமசிவம் குரு சாமிக்கு சிறப்பு பூஜை விழாவில் திரளாக பக்தர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
நேற்று இரவு 8.00 மணியளவில் மந்தின் நகர் மத்தியில் அமைந்துள்ள குபேரர் மண்டபத்தில் ஸ்ரீ சபரி சஸ்தா இயக்கத்தில் ஏற்பட்டில் பக்தி பாடல்கள் இசை கச்சேரி, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு மிக விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலையில் குடிக் கொண்டிருக்கும் ஐயப்பன் சுவமிகளை காண்பதற்கு பல கட்டுப்பாடுகளுடன் விரதம் இருந்து செல்லும் பத்தர்கள் முதலில் பெற்றோர்களிடம் அல்லது மனைவியிடம் அனுமதி பெற வேண்டும் அப்போது தான் அந்த யாத்திரை முழுமையடையும் என்று தமிழ்நாடு ஐயப்பன் சமய சொற்பொழிவாளர் டாக்டர் அறிவின் சுப்பிரமணியம் அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
சபரிமலைக்கு ஒரு முறை யாத்திரைக்கு சென்று விட்டு வந்தால் போதும் அவர்களின் வாழ்க்கையில் மட்டும் இல்லை எல்லா நிலைகளிலும் நன்னெறிக் கொண்ட மனிதனாக காண முடியும் என்பது இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என அவர் தெரிவித்தார்.
பக்கதர்கள் யாத்திரை செல்லவதற்காக நடக்கும் இந்த விழாவில் தமிழ் பள்ளி மாணவர்களின் கல்வி மேன்மைக்கு உதவ நிதி வழங்குவதற்கு முன் வந்திருப்பது சாமி சரணம் ஐயப்பன் பக்கதர்களின் மாபெரும் கல்வித் தொண்டாக இதனை போற்றப்பட வேண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு 18 ஆண்டுகள் தொடர்ந்து யாத்திரை சென்ற எஸ். பரமசிவம் குரு சாமியின் சமய தொண்டை பாராட்டுவதற்கு நடத்தப்பட்ட நிகழ்வில் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினர்
ஜ.அருள்குமார் மந்தின் ஸ்ரீ சபரி சஸ்தா இயக்கத்தில் 10 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்குவதுடன் இந்து சமயம் மேலும் சிறப்பாக வளர்வதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகள், ஆதரவும் கொடுக்கப்படும் என அவர் உறுதிக் கூறினார்.
நாடு முழுவதும் இருந்து தேசிய, மாநில அளவில் ஐயப்பன் சங்க அமைப்புகளில் பொறுபாளர்கள் கலந்துக் கொண்ட இவ்விழாவில் மந்தின் வட்டாரத்தில் இருக்கும் கேரோ தமிழ்பள்ளிக்கு 5 ஆயிரம் ரிங்கிட், நீலாய் தமிழ்பள்ளிக்கு 1,500 ரிங்கிட், செம்பாக தமிழ்பள்ளிக்கு 500 ரிங்கிட் நிதியை ஐயப்பன் பக்கதர்கள் நன்கொடையாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 10:21 pm
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
ஈப்போவில் அடுத்தடுத்து தீ விபத்துகள்: 6 வீடுகள் சாம்பல்
December 30, 2025, 8:00 pm
போலிஸ்காரர் போல் நடித்து மோசடி: RM7.5 லட்சம் இழந்த பெரியவர்
December 30, 2025, 4:13 pm
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்
December 30, 2025, 4:12 pm
பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்
December 30, 2025, 1:27 pm
