நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு மானியம்: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு

கோலாலம்பூர்:

விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு 10,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.

கோலாலம்பூர் ஜிஞ்சாங் பிபிஆர் ஸ்ரீ அமான் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மகளிர் சிலம்ப விளையாட்டு போட்டியை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் 

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.

சுக்மாவில் இப்போது சிலம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை மகளிர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், ஏ. விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 120 மகளிர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset