நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி நிலம் வாங்க 1 இலட்சம் ரிங்கிட் வழங்கினார் முன்னாள் அமைச்சர் சிவகுமார்

மஞ்சோங்: 

பேராக் மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தை மலேசிய மக்கள் கொடுத்த நிதியால்  RM 300,000.00 வாங்கியுள்ளது.

செம்பனை மரங்கள் நிறைந்த இந்த நிலத்தை சுத்தப்படுத்த பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஙே கூ ஹாம் RM 50,000.00 மானியம் கொடுத்துள்ளார்.  

நிலத்தைச் சுற்றி  வேலி சுவர் எழுப்ப முன்னாள் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் ஒரு லட்சம் வெள்ளி நிதி வழங்கியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமாரை ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் மனஹரன், பள்ளி வாரிய பொருளளர் பாலகிருஷ்ணன், பள்ளி அறங்காவலர் மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

May be an image of 5 people and dais

ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1938 ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி தோன்றி 84 ஆண்டுகள் கடந்துவிட்டன.

சுதந்திரத்திற்குப் பின் 65 ஆண்டுகளாய் இத் தமிழ்ப்பள்ளியின் நிலம் பலரின் கைகளுக்கு மாறி வந்துள்ளது.

ஆறு வகுப்புகள் கொண்ட இந்த பள்ளியில் 45 மாணவர்கள் பயிலும் வேளையில் 11 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பொதுமக்கள் கொடுத்த 3 லட்சம் வெள்ளியை கொண்டு ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் அண்மையில் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கியது.

புதிதாக வாங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் திடல், சுற்றுச் சுவர், பாலர் பள்ளியை அமைக்க பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று பள்ளி வாரியத் தலைவர் மனஹரன் தெரிவித்தார்.
.
ஒரு லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மனிதவள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற வ.சிவகுமார் அவர்களுக்கு ஆயர் தாவார் தோட்டத்தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் நன்றிதனையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். வெகுவிரைவில் பள்ளி நிலத்தைப் பார்வையிட பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரை அழைக்கவிருப்பதாக வாரியக்குழு தலைவர் மனஹரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தனர்.

- ஆர்.பாலசந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset