நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்ஹாம் கட்டடம் விவகாரத்தில் எம்.ஏ.சி.சி-யின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இல்ஹாம் கட்டடம் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள். அவர்கள் எந்தத் தடையுமின்றி தங்களின் விசாரணையைத் தொடர்வார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான இல்ஹாம் கட்டடத்தை எம்.ஏ.சி.சி கைப்பற்றியுள்ளது.

பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டவர்கள் உட்பட எந்த வகையான ஊழல்களிலும் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எம்.ஏ.சி.சி மற்றும் நாட்டின் நீதித்துறை துணிச்சலானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சி.சி அவர்களின் கடமைகளைச் செய்யட்டும். யாராக இருந்தாலும் விசாரணையிலிருந்து தப்பிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செல்வாக்கையும் ஊடகங்களையும் குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பதைத் தாம் விரும்பவில்லை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பதவியிலிருந்தாலும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மக்கள் தனது நிர்வாகத்தை விமர்சிப்பதை தான் விரும்பவில்லை என்றும் அன்வார் மேலும் விளக்கினார்.

இந்த வழக்கில் எம்.ஏ.சி.சி விசாரணையில் தேவையற்ற அனுமானங்களைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் அன்வார் கேட்டுக் கொண்டார்.

பதவியிலுள்ள ஒருவர் விசாரிக்கப்படும் போதெல்லாம் ஓர் அரசியல்) திட்டம் இருக்க வேண்டும் என்ற எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம்.

நேற்று, டைமின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டடத்தை எம்.ஏ.சி.சி கைப்பற்றியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset