நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநிலத்தில்  7294 கோவிட் 19 தொற்று சம்பவங்கள்: ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தகவல் 

ஈப்போ: 

2023ஆம் ஆண்டில் மட்டும் பேராக் மாநிலத்தில் சுமார் 7294 பேர் கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் மாநில சுகாதார இலாகா அறிக்கையை வெளியிட்டதாக மாநில மனிதவளம், சுகாதாரம் மற்றும் இந்திய விவகாரங்களுக்கான செயற்குழு தலைவர் சிவநேசன் கூறினார். 

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை 7294 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டுகளில் அவ்வெண்ணிக்கை 108,859ஆக இருந்ததாக அவர் சொன்னார். 

மேலும், பேராக் மாநிலத்தில் தொற்றால் 53 பேர் மரணமடைந்துள்ளதாக சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பாக பேராக் மாநிலத்தில் முழு கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்று சிவநேசன் உறுதியளித்தார். இருப்பினும், மாநில மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset