நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விபத்து நிகழும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கோலாலம்பூர்:

கிறிஸ்துமஸ் பெருநாள், புத்தாண்டு தினங்களை முன்னிட்டு நாடு முழுவதும் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளில போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர்.

பெருநாள், நீண்ட விடுமுறை காரணமாகச் சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ முகமது அஸ்மான் சப்ரி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரையிலும் புத்தாண்டு விடுமுறையின் போதும் பொது மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் காரணத்தால் நெடுஞ்சாலைகளில் 20 லட்சம் வாகனங்கள் செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பட்டார்.

நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் நிலையில் வாகன நெரிசலை விரைந்து தணிக்கும் பணியில் நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து செயல்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது அவசர சூழல்களை எதிர் நோக்கும் பட்சத்தில் போக்குவரத்துத் தகவல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தங்களின் பாதுகாப்பையும் சாலையைப் பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் அதேவேளையில் சாலை விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset