நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் திட்டங்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும்: பெற்றோர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

ஷாஆலம்:

மித்ராவின் திட்டங்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் மித்ரா  சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் பொறுப்பேற்று  பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டங்களின் வாயிலாக் நாட்டில் உள்ள  525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6000 மடிக் கணினிகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மித்ரா 3 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந்த மடிக்கணினிகள் பயன்படுத்தப்படும் திட்டம் வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் அதற்கான உபகாரணங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை என்று எமரெல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தயாளன் கூறினார்.

இந்த மடிக்கணினி ஒரு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் அதனுடன்  Chrome flex மென்பொருளோடு வழங்கப்படிருக்கின்றது. 

இந்த மென்பொருள் பாட திட்டம் நமது மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும். ஆனால் இந்த குறிப்பிட்ட பாட திட்டமானது பள்ளிகளிலேயே தான் செயல் படுத்த முடியுமே தவிர மாணவர்கள் அவர்களின் இல்லங்களில் இருக்கும் கணினிகளில் இந்த பாட திட்டத்தை மீள்பார்வை செய்யவோ மறுபடியும் முயற்சி செய்து பார்க முடியாது.

மேலும்  இந்த பாட திட்டம் பயன் படுத்த  WIFI இணைப்பு மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால் பல பள்ளிகளில் இந்த WIFI இணைப்பு இருந்தாலும் கூட ஒரே நேரத்தில் பல கணினிகளை இணைப்பது சிரமமாக உள்ளது ஏனெனில் நமது தமிழ்ப்பள்ளிகளில் WIFI இணைப்பு சம சீராக இல்லாமலும் சில பள்ளிகளில் இந்த வசதி வாய்ப்பும் கூட கிடையாது. 

இந்த மடிக்கணினி தொடக்க பள்ளி மாணவர்களுக்கு தேவையானதா என்பதை முதலில் நாம் ஏற்று கொள்ள வேண்டும். மேலும்  மடிக்கணினிகளை பராமரிக்கும் செலவுகளும் அதிகமாகும்.

ஆகையால் பெற்றோர்களாகிய நாங்கள், முதலில் அடிப்படை கணினி பாட திட்டத்தை முழு இணைய வசதியுடன் மாணவர்களுக்கு போதிக்க அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யுங்கள்  என்று கேட்டுக் கொள்கிறோம். 

இதே போல் கடந்த காலங்களில் மித்ரா மூலமாக பெற பட்ட உதவி பொருட்கள் தரமானதாக இல்லை என்பதை இங்கு  பதிவு செய்ய விரும்புகிறேன். உதாரணத்திற்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலமாக பெற பட்ட மேஜை ,நாற்காலிகள் ஓராண்டுக்கு மேல் பயன் படுத்த முடியாமல் போகிறது. 

ஏனெனில் அந்த தளவாட பொருட்கள் தரமானதாக இல்லாததால் ஒரு குறுகிய காலகட்டத்தில் உடைந்து பயன்பாட்டிற்கு இல்லாமல் போகிறது. 

மித்ரா எங்களுக்கு தரமான பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்கவும், தரம் அற்ற உதவி பொருட்களை அதிகம் வழங்குவதற்கு பதிலாக சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் கூட அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய கூற்று.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மித்ராவின் பணம் சரியாகவும் முறையாகவும் நம் சமுதாயத்திற்கு சென்று அடைய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள் என்று தயாளன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset