நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் முயற்சியால் இரு சொஸ்மா கைதிகள் இன்று விடுவிப்பு: வழக்கறிஞர் ராஜசேகரன்

ஷாஆலம்:

மஇகாவின் முயற்சியில் மேலும் இரு சொஸ்மா கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இதனை மஇகா வழக்கறிஞர் குழுவின் தலைவர் ராஜசேகரன் உறுதிப்படுத்தினார்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 33 பேரை மீட்க மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையில் வழக்கறிஞர் குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி  ஹஸ்புல்லா பின் ஹனாபி தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பின் அடிப்படையில்  21 பேரும் அடுத்தாண்டு ஏப்ரலில் விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் செல்வமோகன், விஜேந்திரன் கடந்த மே மாதம்  ஜாமினில் வெளியே வந்தனர்.

இதில் செல்வமோகன் நீதிமன்ற வழக்குகளில் மனநல ரீதியில் பங்கேற்க முடியாது.

சட்டத்துறை தலைவர் அலுவலகமும் இதை ஒப்புக் கொண்டது.  இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் விஜேந்திரன் உடல் நலக் குறைவால் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஏற்கெனவே பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவரும் விடுவிக்கப்பட்டார். இருவர் மீதான் தீர்ப்புகளை நீதிபதி ஹஸ்புல்லா வழங்கினார்.

இவ்வேளையில் நீதிபதிக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று வழக்கறிஞர் ராஜசேகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset