நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எத்தனை இந்திய கட்சிகள் வந்தாலும் தேசியக் கூட்டணியில் பிரச்சினை இருக்காது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

எத்தனை இந்திய கட்சிகள் வந்தாலும் தேசியக் கூட்டணியில் பிரச்சினை இருக்காது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

தேசியக் கூட்டணியில் இந்தியர், சீனர்களுக்காக உருவாக்கப்பட்ட பெர்செகுது பிரிவு சிரம்பான் தொகுதி அமைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இத்தொகுதிக்கு நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். 

மேலும் பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு தொகுதியின் அங்கீகாரத்திற்கான கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொகுதிக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்ததும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான் எனது முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தற்போது நாட்டில் அதிகமான இந்திய அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.

இக்கட்சிகள் தேசியக் கூட்டணியில் இணைவதால் பெர்செகுது பிரிவில் இருக்கும் எங்களுக்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுகிறது.

நான் பல ஆண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சியின் உதவித் தலைவராக பதவி வகித்தேன்.

தேசிய முன்னணியில் மஇகா பங்காளி கட்சியாக இருந்தது. அதனால் எங்கள் கட்சி இறுதிவரை தேசிய முன்னணியில் இணைய முடியவில்லை.

ஆனால் தேசியக் கூட்டணியில் அதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது.

எத்தனை கட்சிகள் வந்தாலும் அனைத்தும் பெர்செகுதுவின் கீழ் தான் இயக்கும். கிடைக்கும் தொகுதிகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.

இந்திய சமுதாயத்தின் ஒற்றுமை தான் தேசியக் கூட்டணிக்கு முக்கியம் என்று அவர் கூறினார்.

இந்திய சமுதாயம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஒருவரை பிரதமராக்கியது.

அவர் ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கும் கிடைக்கும் பலன்களை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நான் எதையும் சொல்ல வேண்டாம். தமிழ் பேசும் அமைச்சர் கூட நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே தேசியக் கூட்டணிக்கு இந்திய சமுதாயம் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset