நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் ஒருமைப்பாட்டு அமைச்சு கைமாறுகிறதா? மித்ராவுக்கு துணையமைச்சர் சரஸ்வதி தலைமையேற்கிறார்?

புத்ராஜெயா:

மித்ரா மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கைமாறவுள்ளது. அமைச்சின் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மித்ராவுக்கு தலைமையேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறனர்.

கடந்த காலங்களில் பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ரா ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது.

சம்பந்தப்பட்ட அமைச்சு மலாய்க்காரர்கள் பொறுப்பேற்பதால் அந்நிதி முறையாக மக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மஇகாவின் கோரிக்கைக்கு இணங்க மித்ரா பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. மித்ரா நிதியில் குளறுபடிகள் இருக்கக் கூடாது. 

இதனால் டத்தோ ரமணன் தலைமையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்.

இப்பணிக் குழு முதல் முறையாக 100 மில்லியன் ரிங்கிட்டை முழுமையாக பயன்படுத்தியது.

மித்ராவில் முறைகேடு அபாயம் இல்லை என்று எம்ஏசிசியும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.

இந்நிலையில் இப்பணிக் குழுவிற்கு தலைமையேற்ற டத்தோ ரமணன் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதனால் மித்ரா அவரை விட்டு செல்லுமா என்றும்  தேசிய ஒருமைப்பாட்டுத் துறையின் துணயமைச்சராக சரஸ்வதி கந்தசாமி பொறுப்பேற்றதால் அவரின் கீழ் மித்ரா கொண்டு செல்லப்படுமா என்றும் பல கேள்விகள் எழுந்தது.

இந்த விவகாரத்தில் பிரதமர் தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மித்ரா மீண்டும் ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளது.

குறிப்பாக துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மித்ராவுக்கு தலைமையேற்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி  உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் மித்ரா பந்தாடப்படுகிறது. 

பிரதமர் துறையின் கீழ் இருந்து ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதற்கான் நோக்கம் என்னவென்று மக்களுக்கு புரியவில்லை.

ஏற்கெனவே தமிழ் பேசும் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்ற ஏமாற்றம் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திடம் உள்ளது.

தர்போது மித்ரா விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மடானி அரசாங்கத்தின் மற்றொரு தவறான நகர்வாக இருக்குமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset