நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: சிவாஜி கணேசன் கலை மன்றம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

தமிழ்ச்சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. 

செவாலியர் சிவாஜி கணேசனின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி மாலை 7 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள டான்ஶ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது என்று சிவாஜி கணேசன் கலை மன்றம் மலேசியாவின் தலைவர் இயக்குநர் விஜயசிங்கம் கூறினார். 

சிவாஜி கணேசனின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சஹாதேவன் கலந்துக்கொள்ளவுள்ளார். 

இந்த நிகழ்விற்கு நுழைவு முற்றிலும் இலவசம் என்றும் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுவதாக இயக்குநர் விஜயசிங்கம் நம்பிக்கை ஊடகத்திடம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset