நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஏர் பேக் பிரச்சனை காரணமாக 1.12 மில்லியன் கார்களைத் திரும்பப் பெறுகிறது டோயோட்டா நிறுவனம் 

வாஷிங்டன்: 

டோயோட்டா கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்கில் சிறு கோளாறு இருப்பதால் உலகம் முழுவதும் 1.12 மில்லியன் கார்களைத் திரும்ப பெற்று கொள்வதாக டோயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சந்தையில் அனுப்பப்பட்ட  Avalon, Camry, Corolla, RAV4, Lexus ES250, ES300H, ES350, RX350 Highlander, Sienna, ஹைப்ரிட் ரக கார்கள்  திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. 

அமெரிக்காவில் மட்டும் மொத்தம் ஒரு மில்லியன் கார்களை டோயோட்டா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது. 

இந்தச் சிறு கோளாறு சரி செய்ய கார்களைத் திரும்ப பெற்று கொள்வது குறித்து  உரிமையாளர்களுக்கு பிப்ரவரியில் தெரிவிக்க டோயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம்  அமெரிக்காவில் உள்ள 3,500 RAV4 ரக கார்களைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset