நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DAP கட்சியின் நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துக்கள்; பிரதமர் அன்வார் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கோலாலம்பூர்: 

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் DAP கட்சி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அக்கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார். 

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகள் இவ்வாறு கருத்து கூறுவது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகள் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

கோலாலம்பூரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று DAP கட்சியை சேர்ந்த TAN KOK WAI கூறிய கருத்து பெரும் பரபரப்பானது. 

இந்நிலையில், முன்னாள் நம்பிக்கை கூட்டணி உறுப்பினரான அவர் அறிக்கைகள் வெளியிடுவதில் கவனமாகவு செயல்பட வேண்டும் என்று கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். 

DAP கட்சியின் போக்கு குறித்து அன்வார் இப்ராஹிம் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான அவர் வலியுறுத்தினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset