நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுப்போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை; ஆனால் ஊக்குவிக்கப்படுகின்றனர்: அந்தோணி லோக்

கோலாலம்பூர்: 

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல; ஆனால் ஊக்குவிக்கப்படுவதாக நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர்  அந்தோணி லோக் கூறினார்.

நாட்டில் அண்மை காலமான கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கை உயர்வு கண்டுள்ள நிலையில் தற்சமயத்திற்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அமைச்சர் விளக்கினார். 

முகக்கவசம் அணிவதா இல்லையா என்ற விதிமுறைகளை சுகாதார அமைச்சின் முடிவைப் பொறுத்தது என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் தெரிவித்தார். 

முன்னதாக, கோவிட் 19 பெருந்தொற்று நிலை மலேசியாவில் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset