நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் ஆலய விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுகிறார் துணையமைச்சர் சரஸ்வதி: டத்தோஸ்ரீ சரவணன் காட்டம்

கோலாலம்பூர்:

செந்தூல் ஆலய விவகாரத்தில் வரலாறு தெரியாமல் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பேசுகிறார்.

பேசுவதற்கு முன் அவர் வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் காட்டமாக கூறினார்.

செந்தூல் நாகம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் விளக்கம் கேட்டால், அதற்கு என்ன நடவடிக்கை என்பதை தான் ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் சரஸ்வதி பேசியிருக்க வேண்டும்.

அதை விடுத்து என்னை கைகாட்டுவதும் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதுதான் ஒரு துணையமைச்சரின் வேலையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆலய பிரச்சினை கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கியது. நான் 2009ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக பதவிக்கு வந்தேன்.

நான் பதவியில் இருந்த போது கூட்டரசுப் பிரதேசத்தில் எந்தவொரு ஆலயமும் உடைக்கப்படவில்லை.

அதே வேளையில் பல ஆலயங்களுக்கு நிலம் பெற்றுத் தரப்பட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்துக் கொள்ளாமல் மற்றவர்களை கைகாட்டுவது துணையமைச்சருக்கு அழகல்ல.

இந்து ஆலய சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பதில்தான் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

அதை விடுத்து மற்றவர்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் காட்டமாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset