நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் ஆலய விவகாரம்: டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டால் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

கோலாலம்பூர்:

செந்தூல் ஆலய விவகாரத்தில் டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டால் உண்ணாவிரத போராட்டம்  முடிவுக்கு வந்தது.

செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம தொடரும் என்று டத்தோ ஏகே ராமலிங்கம் அறிவித்தார்.

இந்நிலையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் உள்ளவர்களை அவர் சந்தித்து பேசினார்.

அதே வேளையில் ஒய்டிஎல் நிறுவனத்தின் உயர் அதிகாரியையும் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனை தொடர்ந்து ஒய்டிஎல் நிறுவனத்திரும் ஆலய நிர்வாகத்தினரும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச இசைவு தெரிவித்துள்ளனர்.

டத்தோஸ்ரீ சரவணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. சம்பவ இடத்தில் கூடியிருந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதேவேளையில் ஆலயத்தில் தொடர்ந்து பூஜைகள் நடத்த ஒய்டிஎல் நிறுவனமும் அனுமதி வழங்கி உள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset