நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பிரபல வழக்கறிஞர்  டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானார் 

பெட்டாலிங் ஜெயா: 

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். 

டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானதை அவரின் புதல்வர் ஹுஸிர் சுலைமான் உறுதிப்படுத்தினார். சட்ட விவகாரங்களில் பண்டிதனாக விளங்கிய டத்தோ சுலைமான் அப்துல்லா, பல முன்னனி வழக்குகளை ஏற்று நடத்தினார். 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய ஊழல் வழக்குகள், பேரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியலமைப்பு சட்ட நெருக்கடி ஆகிய வழக்குகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாதாடினார். 

மேலும், ஷரியா நீதிமன்றத்தின் மாண்பை மேலோங்க செய்யும் அதன் சிறப்பு செயற்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஷரியா நீதிமன்றத்தின் நிலையை தழைத்தோங்க செய்தவராகவும் டத்தோ சுலைமான் விளங்கினார். 

இந்நிலையில் வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லாவின் மறைவிற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset