நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பேசக்கூடிய அமைச்சரை நியமனம் செய்யுங்கள்: பிரதமருக்கு சரவணன் சின்னப்பன் வலியுறுத்தல் 

கோலாலம்பூர்: 

புதிதாக சீரமைக்கப்பட்ட மடானி அமைச்சரவையில் தமிழ்ப்பேசக்கூடிய ஓர் இந்திய அமைச்சர் கூட இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக DHRRA MALAYSIA அமைப்பின் தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார். 

அமைச்சரவையில் DAP கட்சியைச் சேர்ந்த கோபிந்த் சிங் டியோ முழு அமைச்சராக நியமிக்கப்பட்டதை யாரும் கேள்வி எழுப்பவில்லை. இருப்பினும், தமிழ்ப்பேசக்கூடிய அல்லது தமிழ் பின்புலம் கொண்ட ஒருவரை அமைச்சராக நியமிக்காதது ஏன் என்பது தான் சமூகத்தின் கேள்வியாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 

கடந்த 1955ஆம் ஆண்டு முதல் அமைச்சரவையில் தமிழ்ப்பேசக்கூடிய ஒருவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்துள்ளனர். ஆனால் முதன்முறையாக மலேசியாவில் அமைச்சரவையில் தமிழ்ப்பேசக்கூடிய அமைச்சரை நடப்பு மடானி அரசாங்கம் நியமிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சியில் தமிழ்ப்பேசக்கூடிய தலைவர் ஒருவர் கூடவா இல்லை என்று கேள்வி எழுப்ப நினைக்கிறது. ரமணன், சரஸ்வதி போன்றவர்கள் தமிழ்ப்பேசக்கூடியவர்கள். ஏன் அவர்களை நியமிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் அமைச்சரவை மாற்றம் இந்திய சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துள்ளதாக சரவணன் சின்னப்பன் கருத்துரைத்தார்.

இதனால், தமிழ்ப்பேசக்கூடிய அமைச்சரை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக்கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset