நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர் ஆலோசனை வழங்கலாம்; முடிவு பிரதமர் தான் எடுக்க வேண்டும் 

கோலாலம்பூர்: 

அரசாங்க விவகாரங்களில் பிரதமர் தான் முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாமன்னர் பிரதமருக்கு ஆலோசனை வழங்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர். 

ஒருவேளை அரச விவகாரங்களில் தொடர்பாக மாமன்னர் ஆலோசனைகளையும் பார்வைகளையும் அரசாங்கத்திடம் முன்வைக்கலாம் என்று மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான் அஹ்மத் ஃபௌசி தெரிவித்தார். 

மலேசிய ஒரு ஜனநாயக நாடாகும். மக்கள் வாயிலாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தங்களின் விவாதங்களை நிகழ்த்த அரசியலமைப்பு சட்டம் வழிவகுக்கிறது என்று அவர் குறிப்ப்பிட்டார். 

முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் பெட்ரோனாஸும் மாமன்னரின் நேரடி பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் கூறினார். இந்த விவகாரம் நாட்டில்  பேசு பொருளாக மாறியது. 

சுல்தான் இப்ராஹிம் பரிந்துரையானது அரசியலமைப்பு சட்டத்துடன் முரணாக இல்லை. இருந்தபோதும் அரசாங்கம், அரசவை அதிகாரங்களில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் பிலிப் கோ கூறினார். 

சுல்தான் இப்ராஹிம் பரிந்துரையைப் புத்ராஜெயா கருத்தில் கொள்ளும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset