நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உழைப்பால் உயர்ந்த முன்னணி நிறுவனம் MIAK: டத்தோஸ்ரீ இக்பால் பாராட்டு 

ஷா ஆலம்:

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெஸ்லே, F&N, அலிஃப் போன்ற முன்னணி நிறுவனங்களின் பொருட்களை விநியோகிக்கும் MIAK டிரேடிங் உழைப்பால் உயர்ந்து நிற்கிறது என்று இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவரும் நம்பிக்கை நிறுவனருமான டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

35 ஆண்டுகளாக உணவு பொருட்களை விநியோகித்து வரும் இப்ராஹிம் பின் அப்துல் காதரை சிறு வயதில் இருந்து நான் அறிவேன். கடுமையான உழைப்பாளியான அவர் சிறுக சிறுக முன்னேறி இந்த உயரத்தை தொட்டுள்ளார். அவரது விடாமுயற்சியினால் இந்த நிறுவனம் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளது. 

அவரது வெற்றிக்கு பின்னால் பலர் இருந்திருக்கலாம். தற்போது அவரது மகன் முஹம்மது யூசுஃப் இந்தத் தொழிலை கற்று வருகிறார். தனக்கு பிறகு இந்தத் தொழில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற இப்ராஹிமின் எண்ணம் ஈடேற வேண்டும்.

May be an image of 4 people, dais and text

நிர்வாகத்தில் அவருக்கு பல வழிகளிலும் உதவி வரும் அவரது சகோதரி சித்தி ஆயிஷா, நிதி நிர்வாகத்தை கவனித்து வரும் அர்ஷத், என்று பலர் இருந்தாலும் இந்த வெற்றிக்கு அஸ்திவாரமாக இருப்பவர்கள் ஊழியர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 

ஊழியர்களின் வியர்வை உலர்வதற்கு முன் அவர்களது சம்பளத்தை கொடுத்துவிடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதனை இப்ராஹிம் நேரத்தோடு தந்து வருவதோடு ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருவது பாராட்டுதலுக்குரியது. 

தொடர்ந்து ஊக்கத்தோடு உழைத்து நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இன்னும் பல ஆண்டுகள் பீடு நடைபோட்டு MIAK நிறுவனம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset