நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடக அறிக்கைகளை வெளியிடும் போது வெளியுறவு அமைச்சகம் கவனமாக இருக்க வேண்டும்: ஜம்ரி

கோலாலம்பூர்:

அனைத்துலக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடும் போது வெளியுறவு அமைச்சகம் கவனமாக இருக்க வேண்டும்.

அமைச்சகம் ஊடகங்களுடனான தனது உறவுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சில விபரங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிடும் போது தூதரக நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் சுட்டிக் காட்டினார்.

பல கொள்கைகளுக்கு  வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பட்டுள்ளது.

எனவே, சில நாடுகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடிய, தகவல்களை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்படும் எந்தவொரு அறிக்கையும் நாட்டின் இராஜதந்திர உறவுகளைக் குறிப்பதாக இருக்கும்.

காசா, பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பிரச்சனைகளில் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு கவனமாக அறிக்கையை தொகுத்துள்ளோம் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset