நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரத்தான் ஓட்டத்திற்காக பினாங்கு பாலம் மூடப்படும்

ஜார்ஜ் டவுன்:

அனைத்துலகப் பினாங்கு பால மாரத்தான் ஓட்டத்திற்காக பினாங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17-ஆம் தேதி நள்ளிரவு முதல் காலை 10 மணி வரை மூடப்படும்.

நேற்று தொடங்கி அனைத்து வாகனங்களும் மாற்று வழிகளைப் பயன்படுத்தி சுல்தான் அப்துல் ஹலீம் முவாசாம் ஷா பாலத்திலிருந்து ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா வழியாக பாயான் லெபாஸ் வரை செல்லலாம் என்று ப்ளஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

பயான் லெபாஸிலிருந்து, வாகனங்கள் ஜாலான் பெர்மாத்தாங் டாமார் லாவுட் வழியாக ஜாலான் பத்து மாவுங்கிற்குச் செல்லலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset