நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய உணவக ஊழியர்களுக்கு பயிற்சிகள்: பிரிமாஸ் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர்:

நாட்டிலுள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தொழில் திறன்களை மேலும் வளர்த்து கொள்ள எச்.ஆர்.டி.கோர்ப் மூலம் நிர்வாகப் பயிற்சி திட்டங்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும், இந்திய உணவக உரிமையாளர்களுக்குத் திவேட் தொழில்திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சமையல் கலை சம்பந்தப்பட்ட தொழில் திறன் பயிற்சிகள் மூலம் இந்திய உணவக உரிமையாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை உருவாக்க இயலும். 

அந்நிய தொழிலாளர்கள் சார்ந்து இருப்பதை காட்டிலும் தீவேட் தொழில் திறன் பயிற்சிகள் மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

May be an image of 3 people and people studying

May be an image of 8 people, dais and text

மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி நேற்று நடைபெற்ற பிரிமாஸ் ஆண்டு கூட்டத்தில் பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

எச்ஆர்டி கோர்ப் மூலம் நிர்வாக பயிற்சி மற்றும் தீவேட் மூலம் சமையல் தொழில் திறன் பயிற்சி தேவை என்று பிரிமாஸ் முன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக மிக விரைவில் அவர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.

பிரிமாஸ் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset