நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா 10 ஆண்டுகளில் 22,500 கோடி முதலீட்டை பதிவுசெய்துள்ளது: துங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்

கோலாலம்பூர் :

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மலேசியா 22,500 கோடி முதலீட்டை பதிவு செய்துள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் டத்தோஸ்ரீ துங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மலேசியாவின் மிக உயர்ந்த மற்றும் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

இது மலேசியாவின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முதலீட்டுத் தளமாக நிரூபித்துள்ளது என்றார் அவர்.

அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் உள்நாட்டு நேரடி முதலீடு (DDI) விகிதம் ஏறக்குறைய அதே எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இவ்வாண்டின் ஒன்பது மாதங்களில் FDI க்கு 56 விழுக்காடு, DDI க்கு 44 விழுக்காடு ஆகும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset