நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவிலிருந்து இஷாம் ஜாலில் நீக்கம்

பெட்டாலிங் ஜெயா :

அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான இஷாம் ஜாலில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனை அம்னோ கட்சியின் உச்சமன்ற செயலவை அறிவித்துள்ளது.

நேற்று இரவு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் டிஏபியுடன் இணைந்து செயல்படுவது அம்னோவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று இஷாம் ஜாலில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு இஷாமுக்கு ஜாஹிட் விடுத்த சவாலையும் அவர் நிராகரித்தார்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சி கொள்கை முடிவுகளும் கட்சியின் உச்சமன்ற செயலவையால் தீர்மானிக்கப்படுகின்றதாக ம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர். அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset