நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் ஆள்மாறாட்டம், மோசடி குறித்து மலேசிய இணையப் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

கோலாலம்பூர் :

வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி பணப் பரிமாற்றம் செய்யும் சம்பவங்கள் குறித்து மலேசிய இணையப் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் லின்க்கை அனுப்புவதற்கு முன், பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நபரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, அந்த செயலியைப் பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக மலேசிய இணையப் பாதுகாப்பு ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் தொடர்புகள் பணம் தேவைப்படும் தங்கள் நண்பர் அனுப்பிய செய்தியை நம்பி ஏமாறுவார்கள்.

வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று மலேசிய இணையப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்துகிறது.  

தொடர்பு உறுதிப்படுத்தலைப் பெறுவதற்கு முன்பு எந்த பணப் பரிமாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset