நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டினர்கள் மின்னியல் வருகை பதிவை ( MDAC ) மேற்கொள்வது எப்படி ?

பெட்டாலிங் ஜெயா :

மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டினர் டிசம்பர் முதலாம் தேதி முதல் மின்னியல் வருகை பதிவை ( MDAC ) நிரப்ப வேண்டும்.

ஆஸ்திரேலியா, புருனை, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, நியூசிலாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் ஆகிய 10 நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகள் மின்னியல் வருகை பதிவை ( MDAC ) நிரப்ப வேண்டும்.

மலேசியா செல்வதற்கு மூன்று நாட்களுக்குள் அந்த MDAC அட்டையை நிரப்பி விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

அம்மின்னியல் வருகை பதிவில் ( MDAC ) அதில் பெயர், நாடு, கடப்பிதழ் விபரங்கள், வருகை, புறப்படும் தேதிகள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

மலேசியாவின் நிரந்தரவாசிகள், மலேசியா தானியாக்க குடிநுழைவு அனுமதி (Malaysia Automated Clearance System pass) வைத்திருப்பவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னியல் வருகை பதிவை https://imigresen-online.imi.gov.my/mdac/main என்ற அகப்பக்கத்தில் நிரப்ப வேண்டும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset