நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெரிக்காத்தான் நேஷனல் வாயிலாக அம்னோவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயார்

கோலாலம்பூர்: 

பெரிக்காத்தான் நேஷனல் வாயிலாக அம்னோவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார். 

உம்மா ஒற்றுமையை பாஸ் கட்சி என்றுமே புறந்தள்ளியதில்லை. மாறாக மற்ற கட்சியுடன் ஒத்துழைப்பு நல்கப்படுவது என்பது ஷூரா மன்றத்தில் இணக்கம் பெறப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, நாட்டிலுள்ள மலாய் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து மலாய் சமூக நலனுக்குப் பாடுபட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜாலில் கருத்து தெரிவித்திருந்தார். 

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியை உருவாக்கினர். இருப்பினும், அக்கூட்டணி வலுவிழந்து போனது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset