நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாஃபி அப்துல்லாவிற்கு எதிராக மேல்முறையீடு நடவடிக்கை; அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பு கைவிட்டது 

கோலாலம்பூர்: 

பிரபல வழக்கறிஞர் டான்ஶ்ரீ முஹம்மத் ஷாஃபி அப்துல்லாவின் விடுதலைக்கு  எதிராக மேல்முறையீட்டு நடவடிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் குழு திரும்ப பெற்றது. 

கள்ளப்பண பரிமாற்றம் நடவடிக்கை காரணமாக  குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவிற்கு இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அது குறிப்பிட்டது. 

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம் தொடர்பாக நீதித்துறையானது சிறப்பாக இயங்குவதாகவும் இதில் சந்தேகத்திற்குரிய இடம் எதுவும் இல்லை என்று ஷாஃபி & கோ வழக்கறிஞர் நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. 

முன்னதாக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அம்லா வழக்கு தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த பிரபல வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவைக்  கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset