நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமையை நிலைநாட்ட பல இன பணியாளர்களுடன் தீபாவளி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஈப்போ: 

 இங்குள்ள  ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் தீபத் திருநாள் மற்றும்  கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்த மருத்துவமனையில் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் இந்த மருத்துவ மனையில் பல சமுக நல நிகழ்வுகள்  ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறவதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் அ.சசிகலா கூறினார்.

அந்த வகையில். இந்த ஆண்டு தீபத் திருநாள் கொண்டாட்டம் முதல் முறையாக  நடைபெற்றுள்ளது. 

இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டும்  ஒரு  சேர தீபத் திருநாளும் இணைந்து கொண்டாடப்படுவதை அவர் குறிப்பிட்டார்.

 மகப் பேறு மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் அருக்கு அப்பனா  நாயுடு தலைமையில்  கொண்டாடப்பட்டது என்றார்

இந்த மருத்துவ மனையில் சுமார் 4 ஆயிரம் பணியாளர்கள் சேவையாற்றும் வேளையில் அதில் சுமார் 300 இந்தியர்கள் சேவையாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் இந்திய பணியாளர்களுக்கு  சமுக நல அமைப்பும் உள்ளது. இதன் வழி இந்த மருத்துவ மனையில் ஆண்டு தோறும்  பொங்கல் விழாவும் சிறப்பு நடத்தப்பட்டு வருவதாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மகப்பேறு நிபுணத்துவ மருத்துவர் டத்தோ டாக்டர் அருக்க அப்பனா நாயுடு குறிப்பிட்டார். 

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஈப்போ லிட்டல் இந்தியா டி.எஸ். நகைக்கடை உரிமையாளரும், பேராக் நகைக் கடை சங்க தலைவருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டார்.

-ஆர். பாலசந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset