நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-மடானி மின்னியல் பணத்தை ரொக்கமாக வழங்கும் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம்: ஃபாஹ்மி பட்சில் அறிவுறுத்து

கோலாலம்பூர்:

இ-மடானி மின்னியல் பணத்தை ரொக்கமாக வழங்கும் மோசடியாளர்களிடம்  ஏமாற வேண்டாம் என்று தொடர்பு இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி பட்சில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கம் மக்களுக்கு உதவியை வழங்க அறிவிக்கும்போது பொறுப்பற்ற தரப்புகளின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மின்னியல் பணத்தை ரொக்கமாக வழங்கவதாகக் கூறும் நபர்களின் வார்த்தைகள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நேற்று, மாலை 5 மணி நிலவரப்படி, இ-மடானி மின்னியல் தொகைக்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்ததாக நிதி அமைச்சகம் அறிவித்தது.

பியேர்-டு-பியேர் பரிமாற்றங்கள் மற்றும் கேஷ்-அவுட்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இ-மடாணி கிரெடிட்டைப் பயன்படுத்த முடியாது என்று அரசாங்கம் அறிவித்தது.

MAE, Setel, ShopeePay மற்றும் Touch ‘n Go eWallet குறியீடு வழியாக நாடு முழுவதும் உள்ள 1.8 மில்லியன் விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களில் பங்கேற்கும் இ-வாலட்டுகள் வழியாக மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset