நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது

கான் யூனிஸ்:

காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,200 கடந்துள்ளது. இதில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கொடூரமாக குண்டுவீச்சைத் தொடங்கியதால் இதுவரை 193 பேர் உயிரிழந்தனர்; சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர்  7ம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காசாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வடக்கு காசாவில் சுமார்  80,000 பாலஸ்தீனர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset