நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்

பெட்டாலிங் ஜெயா:

தன்னார்வ தொண்டு நிறுவனமான அமான் பாலஸ்தீன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கியது.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக எம்ஏசிசி எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயாராகவுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு உதவிகளைச் செய்ய நிதி சேகரிக்க அந்நிறுவனத்திற்கு மாற்று வழி இல்லையென்று
அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷித் கூறினார்.

இதுவரை எம்ஏசிசி-யிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

மேலும், நிதி சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை எம்ஏசிசி சரி பார்க்க வேண்டும்.

முந்தைய உதவி பெறுநர்களைச் சந்திப்பதன் மூலம், அமான் பாலஸ்தீனம் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல் முறையா என்பதை அவர்கள் உறுதிப்படுத்த முடியும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset