நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது

மணிலா: 

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மிண்டானாவ் பகுதிக்கு அருகில் நேற்று சனிக்கிழமை அன்று மலேசிய நேரப்படி இரவு 10:37 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. 

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ், தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் சில இடங்களில் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சுமார் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கமும் எரிமலை வெடிப்பு சம்பவங்களும் அவ்வப்போது பதிவாகிறது. 

இந்த நிலநடுக்கம் சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் உணரப்பட்டதாகவும், சக்தி வாய்ந்தது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். 

நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, மேடான பகுதிகளுக்கு சென்றதாகவும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நில நடுக்க பதற்றத்தில் பலரும் தங்கள் வீடுகளிலிருந்து அலறியபடி வெளியே ஓடி வந்தனர்.

உயிர்ச் சேதம் குறித்தோ கட்டிடச் சேதம் குறித்தோ இதுவரை பிலிப்பைன்ஸ் அரசு எதுவும் கூறவில்லை.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset