நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு

ஆயர்தாவார்: 

எலி சிறுநீர்  துர்நாற்றத்தால் மூடும் ஆபாயத்தை எதிர்நோக்கியிருந்த் பேரா மஞ்சோங் மாவட்டத்தில் ஆயர் தாவார் நகருக்கு அருகில் உள்ள  கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு புதிய பள்ளி நிர்மாணிக்க இரண்டு் ஏக்கர் நிலம்  வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் இப் பள்ளியில் இருந்த எலிகளின் ஆதிக்கத்தாலும்  அதன் சிறுநீர் நாற்றத்தாலும் மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் அச்சம் நிலவியது.

பள்ளிகளில் இருந்த எலிகளை ஒழிக்க மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. அப் பள்ளியில் சுகாதார இலாகா மேற்கொண்ட சோதனையில் தொடர்ந்து மாணவர்கள் கல்வியை மேற்கொள்ள பொருத்தமான சூழ் நிலையில் இல்லை  என்று கடிதமும் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் அப் பள்ளிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தாம் திடீர் வருகை புரிந்ததாகவும் , அங்கு இப்பள்ளிக்கூடம் எதிர் நோக்கிய பிரச்சனைகள் கண்டறிந்ததாக பேராக மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை மற்றம் இந்திய சமூகநலத்துறை  ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

இப் பள்ளிக்கு மாற்று இடத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பயனாக இப் பள்ளிக்கூடம் பின் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை அரசு  மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்திற்கு அப்பள்ளிக் கூடம்  1.3 இலட்சம் ரிங்கிட்  பிரிமியம் செலுத்தியாக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. 

இந்த விவகாரமும் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து் மாநில அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை் நடத்தி அந்த தொகையை ரத்து செய்துள்ளதாக கம்போங் கொலம்பியா தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற பள்ளியின் வெண்பா மண்டப திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட போது அவர் தெரிவித்தார்.

இப் பள்ளியில்  தற்போது 45 மாணவர்கள் கல்வியை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் எண்ணிக்கையை  அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இப்பள்ளிக்கு வாகனங்கள் மூலம் வரும் பி40 நிலை மாணவர்கள் பள்ளி நிர்வாகம் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகிறது.

அடுத்தாண்டுக்கான அதன் செலவு தொகை 12, 500 ரிங்கிட்டை பேராக் மாநில அரசு  வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

இப் பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டத்தை எழுப்ப தொடர் நடவடிக்கை எடுக்க அடுத்த மாதம் இப்பள்ளிக்கு துணை கல்வி அமைச்சரை வரவழைக்கவிருக்கும் தகவலையும் அவர் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அதன் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

அதே வேளையில் பள்ளி நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தம்முடைய நேரடி கவனத்திற்கு் கொண்டு வரும்படி சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய பிரச்சனைக்கு தீர்வுக்காண பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு  பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.ரமணிக்கு அவர் நன்றியைக் கூறிக்கொண்டார்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset