நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்

வாஷிங்டன்: 

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றி தூதரக ஆலோசகர் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைந்தார். அவருக்கு வயது 100. 

கனக்டிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. 

கிஸ்ஸிங்கர் புகழ் பெற்றவர் மட்டுமல்ல சர்ச்சைகளின் நாயகரும்கூட.

1923ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், 1938ஆம் ஆண்டு தமது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

கிஸ்ஸிங்கர் 1943இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது அவர் ஐரோப்பாவில் ராணுவச் சேவையாற்றினார்.

போர்களை நியாயப்படுத்துவது, அவற்றை நடத்துவது மட்டும் ரியல்பொலிடிக் நிலைபாட்டினை அவர் கொண்டிருந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சுற்றி நிறைய விவாதங்கள் எழுந்தன.

இருப்பினும், கிஸ்ஸிங்கரை இடதுசாரிகள் ஒரு போர் குற்றவாளியாகவே பார்க்கின்றனர். வியட்நாம் போரை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஸ்தரித்தது

சிலியின் 1973 ராணுவக் கிளர்ச்சியை ஆதரித்தது

கிழக்கு தைமோரை இந்தோனேசியா ஆக்கிரமிக்க தூண்டியது

1971 வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் சென்றது என கிஸ்ஸிங்கர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset