நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்; பிரான்ஸ் பிரதமர் உத்தரவு 

பாரிஸ்: 

வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பிரான்ஸ் நாட்டு அமைச்சர்களுக்குப் பிரதமர் எலிசபெத் பொர்னே உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட OLVID செயலியை அதிகளவில் பயன்படுத்துமாறு அவர் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

TELEGRAM, SIGNAL, WHATSAPP ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த செயலியை நம் நாட்டு அமைச்சர்களே அதிகளவில் பயன்படுத்துவதால் அது நாட்டு மக்களின் நம்பகத்தன்மைக்கு வித்திடும் என்று அவர் சொன்னார். 

நமது அன்றாட வாழ்வில் விரைவான குறுஞ்செய்தி வசதிகள் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது நாட்டின் தயாரிப்பு செயலியான OLVID செயலியை அனைத்து அரசாங்க துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset