நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்

லண்டன்:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானத்தின் சக்கரம் நடுவானில் கழன்று விழுந்தது.

விமானம் லாஸ் வேகஸில் (Las Vegas) உள்ள ஹெரி ரெட் (Harry Reid) அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது அந்தச் சம்பவம் நடந்தது.

லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தின் வலது பக்கத்தின் பின் சக்கரம் கழன்றது.

அனைத்துலக விமானங்களைப் பின்தொடரும் சேவைகளை வழங்கும் Flightradar24இன் நேரடிக் காணொலிப் பதிவில் அந்தச் சம்பவம் பதிவானது.

விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட 40 வினாடிகளில் வலதுபுறத்தில் தீப்பொறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டது.

9 மணி நேரம் 17 நிமிடங்கள் வானில் பறந்த பிறகு விமானம் பாதுகாப்பாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset