நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தில்லானா மோகனாம்பாள் புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்

மதுரை: 

நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90. 

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்தவர்.

இவர்களது குழுவில் தேவூர் சந்தானம், திருவிடைமருதூர் வெங்கடேசன் ஆகியோர் தவில் வாசித்துள்ளனர். 

காரைக்குடியில் சகோதரர்கள் சேதுராமன், பொன்னுசாமி இணைந்து திருமண நிகழ்வில் நாகஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர்.

இவர் வாசிக்கும் பாணியையும் முகத் தோற்றத்தையும் சிவாஜி கணேசன் பார்த்துத்தான் ஒரு கலைஞர் இந்த இசைக் கருவியை எந்த விதத்தில் பயன்படுத்துவார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதை இன்னும் அழகுப்படுத்தி காட்டி இருந்தார்.

இந்தப் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாகஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். 

தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாகஸ்வரம் வாசித்து வந்துளனர். 

1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதை பெற்றுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset