நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கேரள பல்கலைக்கழக கலைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 பேர் பலி

கொச்சி:

கேரள மாநில கொச்சி அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் பிரபல பாடகியின்  இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர்  பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு இடையே திடீரென மழை பெய்த நிலையில், மழையில் நனையாமல் இருக்க பார்வையாளர்கள் மேடையை நோக்கி ஓடினர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள்  காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு கேரள அரசு உத்தர விட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset