நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்; இரு வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு 

சென்னை: 

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில நடிகர்கல் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த 23ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

மருத்துவரின் அறிவுறுத்தலின்படி 2 வாரங்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நாட்களில் கங்குவா படத்தில் இடம்பெறாத காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset