நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது: இயக்குநர் கௌதம் மேனன் உறுதி

சென்னை: 

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் நீண்ட வருடமாக காத்திருந்து வெளியீட்டிற்குத் தயாராகியிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என்று அப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

படம் இன்று வெளியாகாது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் துருவ நட்சத்திரம் திரைக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்தார். கௌதம் மேனன் அவர்களின் இந்த அறிக்கை ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தை அடைய செய்துள்ளது. 

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், பார்த்திபன், ராதிகா, வம்சி கிருஷ்ணா, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர். 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset