செய்திகள் மலேசியா
1360 கோடி வெள்ளியை உள்ளடக்கிய சரவா மாநில வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது
கூச்சிங் :
1,360 கோடி வெள்ளியை உள்ளடக்கிய 2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹரி துன் ஓப்போங் இன்று தாக்கல் செய்தார்.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1,150 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 18 விழுக்காடு அதிகமாகும்.
மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளிப்பதற்கு ஏதுவாகச் செலவினங்களை அதிகரிப்பதை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதாக அபாங் ஜோஹாரி கூறினார்.
அனைவருக்குமான மேம்பாடு, சுபிட்சம் நிறைந்த, நிலையான, ஐக்கிய சரவா உருவாக்கம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தில் மேம்பாட்டிற்கு 904 கோடி வெள்ளியும் நிர்வாகச் செலவினங்களுக்கு 456 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காகச் சில முக்கியத் துறைகளுக்கு இந்தப் பட்ஜெட் தொடர்ந்து நிதியளிக்கும்.
இதன் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை வளப்பமானதாகவும் நெகிழ்த்தன்மை கொண்டதாகவும் உருவாக்க இயலும் என அவர் குறிப்பிட்டார்.
புறநகர்ப் பகுதிகளின் மேம்பாட்டில் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 12, 2024, 5:39 pm
நாட்டை நேசிக்கும் உணர்வு மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளது: செனட்டர் சரஸ்வதி
September 12, 2024, 5:24 pm
இந்திய சமூகத்தின் ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 12, 2024, 3:41 pm
பகாங் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு துணையமைச்சர் டத்தோ ரமணன் டத்தோஶ்ரீ விருது பெற்றார்
September 12, 2024, 3:36 pm
மலேசியா அனைத்து நாடுகளுடன் நட்புணர்வுடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
September 12, 2024, 3:24 pm
மருத்துவமனையில் நஜீப் 1 எம்டிபி வழக்கு விசாரணை செப்டம்பர் 17க்கு ஒத்திவைப்பு
September 12, 2024, 12:18 pm
பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு மின்னியல் பயண பதிவு அவசியம்
September 12, 2024, 11:19 am