
செய்திகள் மலேசியா
நீர், மின்சார கட்டணங்கள் உயரலாம்: அமைச்சர் நிக் நஸ்மி
கோலாலம்பூர் :
நாட்டில் நீர், மின்சாரக் கட்டணங்கள் உயர்த்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக இருக்காது என்று இயற்கை சுற்றுச்சூழல்,பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் நிக் நஸ்மி கூறினார்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியங்களின் ஒன்றாக தண்ணீரும் மின்சாரமும் விளங்கி வருகிறது.
ஆனால் மலேசியாவில் ஒரு சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக தண்ணீர் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் உள்ளது.
குறிப்பாக பகாங் மாநிலத்தில் 40 ஆண்டுகளாகவும் பெர்லிஸ் மாநிலத்தில் 25 ஆண்டுகளாவும் தண்ணீர் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் தான் இக்கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டண உயர்வு குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதன் பின் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
ஆனால் இக்கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக இருக்காது. இதை அமைச்சு உறுதியாக கூறுகிறது.
ஸ்பான் ஏற்பாட்டிலான தமிழ் ஊடகங்களுடனான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நிக் நஸ்மி மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்