நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மரில் ராணுவ முகாமை கைப்பற்றும் ஆயுதக் குழு

ஐஸால்:

மியான்மரில் ராணுவ முகாமை ஆயுதக் குழுவினர் கைப்பற்றி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

மியான்மரில் ராணுவ முகாமை "மக்கள் பாதுகாப்புப் படை' என்னும் ஆயுதக் குழுவினர் கைப்பற்றியதால், அந்த முகாமைச் சேர்ந்த வீரர்கள் அடைக்கலம் தேடி இந்தியாவின் மிஸோரமில்ல் தஞ்சம் புகுந்தனர்.

கிழக்கு மிஸோரமின் சாம்பாய் மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான சோகவ்தர் காவல் நிலையத்தில் 39 வீரர்கள் திங்கள்கிழமை மாலை சரணடைந்தனர். இந்நிலையில், மேலும் 5 வீரர்கள் அதே காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த வீரர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset