நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது

பத்துமலை: 

பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.

பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

May be an image of 1 person and temple

இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.

இன்று காலை புனித வேள்வித் தீ எடுத்தல்,  யாகசாலை நின்மானம், விமான கலச ஸ்தாபன பூஜைகள் நடந்தது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் இப்பூஜைகள்நடைபெற்றது.

May be an image of 1 person, Batu Caves and temple

மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது.நாளை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி வைக்கலாம். அதே வேளையில் நாளை மறுநாள் எண்ணெய் சாத்தும் வைபவமும் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கும்பாபிஷேக விழாவிலும் பகதர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset